கீழ்விஷாரம் திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி
திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி;
ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசாத்துபுரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, கட்டைக் கூத்து நாடகம் நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அர்ஜூனன் வேடமணிந்த நபர் பாடல்கள் பாடிக்கொண்டு தபசு மரம் ஏறி மரத்தின் உச்சியில் நின்று கொண்டு கற்பூர தீபாராதனை செய்து பக்தர்களுக்கு எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் வழங்கினார். நிகழ்ச்சியில் நாட்டாமை தாரர்கள் ராஜேந்திரன், சேரன் மற்றும் விழாக்குழுவினர்கள், உபயதாரர்கள் உள்பட திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். வரும் 29-ந் தேதி காலை துரியோதன் படுகளமும், மாலையில் தீமிதி விழாவும் நடைபெறுகிறது.