கந்திலி அருகே மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மூன்று சக்கர வாகனங்கள் பாழடைந்து குப்பை போல் போட்டு உள்ளனர்

கந்திலி அருகே மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மூன்று சக்கர வாகனங்கள் பாழடைந்து குப்பை போல் போட்டு உள்ளனர்;

Update: 2025-06-25 05:40 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய மூன்று சக்கர வாகனங்கள் பாழடைந்து குப்பை போல் போட்டு கிடக்கும் அவலம். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூ பள்ளிப்பட்டு ஊராட்சி பகுதியில் இயங்கும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பல ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் பழுதடைந்து ஒட்டடை பிடித்து குப்பை போல் போட்டு கிடக்கும் அவலங்கள் காணப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு நவீன வசதியுடன் கூடிய மூன்று சக்கர வாகனங்கள் கேட்டு பல பேருக்கு அது கிடைக்காத சூழ்நிலையில் குறைந்தபட்ச அளவு கைகளில் இயக்கக்கூடிய சாதாரண மூன்று சக்கர வாகனமாவது என தொடர்ந்து கோரிக்கை மனுக்களை கொடுத்து வரும் நிலையில் ஒரு சிலருக்கு மட்டுமே மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பாக நிதி ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முழு சக்கர வாகனங்கள் கொடுப்பதில்லை இதுபோன்ற சூழ்நிலையில் பல ஆண்டுகளாக கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி பயன்படுத்தக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் பழுதடைந்து குப்பை போல் காட்சி அளிப்பது வேதனைக்குரிய சம்பவமாக உள்ளது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மூன்று சக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த மூன்று சக்கர வாகனங்கள் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டு போடுவதற்காக மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்து பூத்திற்கு அழைத்து வருவதற்காக பயன்படுத்தப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News