கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சிங்கம்புணரி கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்;
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பரியாமருதுப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் திருக்கோவில் ஆனி உற்சவ தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவில் கீழத்தெரு மக்கள் கலந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று கோரி, அவர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.