ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சர்வ அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை..
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சர்வ அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் பௌர்ணமி அமாவாசை போன்ற நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெறும். அதன்படி இன்று ஆனி மாத சர்வ அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று பின்னர் அம்மனுக்கு வெள்ளிக்காப்பு மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ எல்லை மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.