ராணிப்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு
கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆட்சியர் ஆய்வு;
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நெமிலி வட்டம், நாகவேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அங்கு பொதுமக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்ட பதிவேடுகள், நகைக் கடன்கள் குறித்த பதிவேடு, கடன் வசூல் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்கள். மேலும் ஏதேனும் பிரச்னைகள் இருக்கிறதா, அல்லது உதவிகள் வேண்டுமா என்று கேட்டறிந்தார்.