டிரினிடி கல்லூரியில் நடைபெற்ற உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.தினத்தை முன்னிட்டு நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2025-06-26 07:13 GMT
போதை பொருள் மையம் & நாட்டு நலப் பணித் திட்டம், நாமக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "மகிழ்வான வாழ்க்கைக்கு போதைப் பொருட்கள் வேண்டாமே" என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார். போதைப்பொருட்களை உட்கொள்வதால் சம்பந்தப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், இந்த சமுதாயத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கினார். போதைப் பொருள் ஒழிப்பு செயலியின் மூலம் எவ்வாறு புகார் அளிப்பது என்பது குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு & ஆயத்தீர்வை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர். தன்ராசு வாசிக்க, நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் தொடர்ந்து வாசித்தனர். நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் கே. சங்கரபாண்டியன், எஸ். கபிலன், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் என். பி. லலிதா மற்றும் போதை ஒழிப்பு & சாலைப் பாதுகாப்பு மாவட்ட தொடர்பு அலுவலர் சி. ஆர். ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஆர். நவமணி, என் எஸ் எஸ் அலுவலர்கள் எம். சசிகலா, வீ. கோகிலா, போதைப்பொருள் ஒழிப்பு மைய அலுவலர் எஸ். ஜெயந்தி, நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், சாலைப் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எல். தீபிகா, உடற்கல்வி இயக்குநர் வீ. அர்ச்சனா உட்பட பேராசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் போதைப்பொருட்களின் தீமைகளை அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியில் மாணவியரின் போதை ஒழிப்பு பேரணியும் நாமக்கல் - மோகனூர் சாலையில் நடைபெற்றது.

Similar News