பின்னோக்கி ஓடும் தடகள போட்டியில் உலக சாதனை படைத்த அரியலூர் இளைஞர்: தமிழக முதல்வரை பலமுறை சந்திக்க முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு:*
விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பெருமை பீத்திக் கொள்ளும் விடியல் அரசு பின்னோக்கி ஓடி உலக சாதனை படைத்து வரும் அரியலூர் இளைஞரை கண்டு கொள்வாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி? எழுப்புகின்றனர்.;
அரியலூர், ஜூன்.26- அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகேயுள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் மகன் ஆறுபடைப்யப்பா(24) பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் பின்னோக்கி ஓடும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பயிற்சி பெற்று உலக அளவில் தற்போது முதல் இடத்தில் இருந்து வருகிறார். இதனிடையே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் லயனீஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினர் சார்பில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆறுபடையப்பா பின்னோக்கி ஓடும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.54 வினாடிகளில் கடந்து மீண்டும் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு பஞ்சாப் இந்தியன் நேஷ்னல் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் 14.40 வினாடியில் 100 மீட்டரை பின்னோக்கி ஓடி சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் தெரிவிக்கையில்:- உலக அளவில் அமெரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் என்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது எனது லட்சியமாக உள்ளது என்றும், கடந்த ஒரு வருடமாக தமிழக முதல்வரையும் விளையாட்டுத்துறை அமைச்சரையும் சந்திப்பதற்கு பலமுறை முயற்சி செய்து பார்த்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் தமிழக அரசு என்னை ஊக்கப்படுத்தினால் கண்டிப்பாக கின்னஸ் சாதனை படைப்பேன் என்றார். விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக அடிக்கடி வாய்ச்சவடால் விடும் விடியா அரசின் முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சரும், பின்னோக்கி ஓடும் அரியலூர் இளைஞரை சந்திக்க மறுப்பது ஏன் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.