சிவகங்கை புதிய ஆட்சியர் பதவியேற்பு
சிவகங்கை புதிய ஆட்சியராக பொற்கொடி பதவியேற்றுக்கொண்டார்;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஆட்சித்தலைவராக இன்று (27.06.2025) பொற்கொடி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியராக (Group-I) பணிபுரிந்தவர். 2013-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக பணிபுரிந்தார். பதவி ஏற்ற பின் அவர் தெரிவித்ததாவது, தமிழக முதல்வரால் அறிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல், அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும் வண்ணம், மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, முனைப்புடன் பணியாற்றுவதற்கான சிறப்பான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்