யோகஹயக்கிரீவர் கோவில் கும்பாபிஷேக விழா
யோகஹயக்கிரீவர் கோவில் கும்பாபிஷேக விழா;
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில் 750 ஆண்டுகள் பழமையான தேவநாதபெருமாள் - ஹேமாபுஜநாயகி தாயார், யோகஹயக்கிரீவர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக குறு,சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம்,காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி.இராஜன்,ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், இந்து அறநிலை துறை அரசு அதிகாரிகள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,இளைஞர் அணி ,மாணவர் அணி அமைப்பாளர்கள்,உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள்,ஏராளமான பக்தர்கள், கலந்துக்கொண்டனர்.