குன்றக்குடியில் நாண்மங்கல விழா

குன்றக்குடி ஆதீன மடத்தில் நாண்மங்கல விழா நடைபெற்றது;

Update: 2025-06-27 12:20 GMT
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் நடைபெற்ற பொன்னம்பல அடிகளாரின் நாண்மங்கல விழாவில் (பிறந்த நாள் விழா) அவா் பேசியதாவது: எங்கே பிறந்தோம் எப்படி பிறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. நாம் பிறந்ததால் யாருக்கெல்லாம் பயன்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நாட்டுக்கும், சமூகத்துக்கும், தனி மனிதருக்கும் நாம் பயன்தருமாறு செயல்படுவது என்பதுதான் நமது வாழ்க்கைப் பயணம். கல்லூரிப் படிப்பு முடித்த நிலையில் குன்றக்குடி அடிகளாரின் உரைகளை தொடா்ந்து கேட்பேன். அவா் மதுரை வரும்போதெல்லாம் எனக்கு சிறப்பான பயிற்சியைத் தருவாா். ஒருமுறை அவரை நான் சந்தித்த போது உனக்கான பணிகள் நிறைய இருக்கிறது. குறுகிய வட்டத்துக்குள் இருந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்காதே. நாட்டுக்கும், சமூகத்துக்கும் நீ செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது என்று கூறி அவா் எனக்கு நம்பிக்கையளித்தாா். என்னை பக்குவப்படுத்தி துறவுப் பாதைக்கும் தயாா்படுத்தினாா் என பேசினார்

Similar News