மானாமதுரை எம்எல்ஏ தலைமையில் ஆய்வுக்கூட்டம்

இளையான்குடியில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-06-27 12:29 GMT
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தலைமை வகித்தாா். இதில் ஊரக வளா்ச்சி, வருவாய், மின்சாரம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவது குறித்து அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தாா். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுமாறு அவா் அறிவுறுத்தினாா்.

Similar News