மங்களபுரம் அரசு பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய மலேசிய தொழிலதிபர்...
மங்களபுரம் அரசு பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிய மலேசிய தொழிலதிபர்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடம் பெற்று அதே பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கும் நிகழ்வானது நடைபெற்றது. நிகழ்ச்சியில் TR.சாமி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், மலேசிய தொழிலதிபர் சுகுமாரன், அவர்கள் தனது சொந்த செலவில் 10ம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரூ.15,000 மற்றும் 11ம் வகுப்பில் பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரூ.10,000 ரூபாய் என 6 மாணவ மாணவிகளுக்கு உதவி தொகையை வழங்கினார்கள். இதனைப் பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் TR.சாமி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாண்டியன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுந்தரம்மாள், PTA தலைவர் சரவணன்,SMC தலைவி ஜானகி, ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. மேலும் இதுகுறித்து மலேசியாவில் பாமாயில் தொழிற்சாலை நடத்தி வரும் தொழில் அதிபர் சுகுமாரன் கூறுகையில் 1970ஆம் மலேசியாவில் இருந்து வந்து நான்காண்டு இப்பள்ளியில் படித்ததாகவும், இப்பள்ளியில் வந்து தான் நான் தமிழ் கற்றுக் கொண்டதாகவும் கூறினார். தற்போது பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியதாகவும், தொடர்ந்து வருடம் வருடம் வழங்குவதாக தெரிவித்தார்..