அரக்கோணத்தில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்கள் கைது
ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்கள் கைது;
அரக்கோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதனுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரீல்ஸ் வெளியிட்டது அரக்கோணம் பழனிபேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 25), அரக்கோணம் அடுத்த நாகவேடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (35) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.