ஜெயங்கொண்டத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ஜெயங்கொண்டத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
அரியலூர், ஜூன்.29- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்திற்குட்பட்ட 188 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமையேற்று துவக்கி வைத்தார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணன், இளையராஜா, தாமோதரன், கார்த்திகேயன், செந்தில் மற்றும் டேவிட் ஆரோக்கியராஜ் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்களுக்கு செயல்பாட்டு முறையில் எவ்வாறு கருத்துக்களை புரிய வைக்கலாம் என்ற நிலையில் பயிற்சி அளித்தனர். 188 தன்னார்வலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மற்றும் இல்லத்தேடி கல்வி வட்டார தலைமை தன்னார்வாளர் வேம்பு ஆகியோர் செய்திருந்தனர்.