புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வழிவிடும் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து அனுஞ்கை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லெட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளை தொடர்ந்து கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.