நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர் கைது

கைது;

Update: 2025-07-02 04:07 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் விரியூர் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, பைக்கில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில், அவர் விரியூர் கிராமத்தை சேர்ந்த டேவிட் மகன் அந்தோணிராஜ், 25; காப்பு காடுகளில் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி எடுத்து செல்வது தெரியவந்தது. போலீசார் அந்தோணிராஜை கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கி, பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர். அந்தோணிராஜை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News