கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-02 04:28 GMT
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் குணசேகரன், அமைப்பு செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். சங்க மாநில துணைத்தலைவர் கோவிந்தன் சிறப்புரையாற்றினார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிய பின், முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும், நுாறு சதவீத தேர்ச்சி குறைவுக்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிறுத்துதல், பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குதல் உட்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Similar News