அகரம் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு மைதானம் திறப்பு
தாராபுரத்தில் செயல்படும் அகரம் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது;
தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுத்திடலை பள்ளி மாணவர்களுக்காக அகரம் பப்ளிக் பள்ளி உருவாக்கியுள்ளது. பள்ளியின் பொருளாளர் சபாபதி, அறங்காவலர்கள் சிவசாமி, சிவநேசன் மற்றும் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் விளையாட்டு மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குமரகுரு நிறுவனத்தின் உதவி உடற்கல்வி இயக்குனர் சரபோஜி, ஜூடோ தற்காப்புக் கலை பயிற்றுனர் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளியின் முதல்வர் ஞானபண்டிதன் புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டு திடலுக்கு சூட்டப்பட்ட பெயருக்கு விளக்கமளித்து பேசினார். விளையாட்டுத் திடலில் பொள்ளாச்சி விஸ்வதீப் மெட்ரிக் பள்ளி மற்றும் ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளி மாணவிகளும், பேசினேட்டிங் யூத் கிளப் மற்றும் இன்ஸ்பையரிங் டீம் கிளப் மாணவர்களும் விளையாடினர். உடற் கல்வி இயக்குனர் தீபக் ராஜா நன்றி கூறினார்.