வாலிபர் கைது
திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபரை பிடித்து சிறையில் அடைப்பு;
ஈரோட்டில் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வாலிபரை பிடித்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.ஈரோடு கருங்கல்பாளையம் கல் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்தி (30). இவர், கடந்த 2020ம் ஆண்டு ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதமாக வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் கார்த்தி ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்திக்கு பிடியாணை பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்பேரில், ஈரோடு டவுன் போலீசார் நேற்று முன்தினம் கார்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.