பெண்ணுடன் மூன்று பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்றதாக பெண் உட்பட 3 பேர் கைது;
ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், பெருந்துறை விஜயமங்கலம் மேக்கூரில் மளிகை கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக அதேபகுதி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கடை உரிமையாளரான வெங்கடேஷ் (37) என்பவரை பெருந்துறை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு ராசாம்பாளையத்தில் தென்றல் நகரில் வீட்டில் பதுக்கி வைத்து குட்கா, புகையிலை விற்றதாக வீட்டின் உரிமையாளரான சென்னியப்பன் மனைவி ஜெயந்தி (55) என்பவரை ஈரோடு வடக்கு போலீசார் கைது செய்தனர். டி.என்.பாளையம் சர்ச் அருகே புகையிலை, குட்கா விற்றதாக பி.துரையம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (66) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 13.39 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பங்களாபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.