பெருமாள் கோவிலில் மகா யாகம்

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் மஹா சுதர்ஸன ஹோமம்;

Update: 2025-07-03 06:41 GMT
ஈரோடு கமலவல்லி நாயகி சமேத கஸ்தூரி அரங்கநாதர் சன்னதியில் மஹா சுதர்மா ஹோமம் நடந்தது.மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு வேதபாராயணம் ஸ்ரீ தர்களர் மூலமந்தர், காயத்ரீ மந்தா, மாலாமந்தர, ஜபத்துடன் மஹா சுதர்ஸன ஹோமம் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து மாலை 5.00 மணிக்கு மஹா தீபாராதனை,பிரபந்த வேதபாராயணம், அடுத்து சாற்றுமறை, மஹாதீபாராதனை, தீர்த்தம், நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை)காலை 6.00 மணிக்குவிஸ்வருட தரிசனத்தோடு சுப்ரபாதம் பாடப்பட்டு திருபல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி திருவாராதனம், கும்ப ஆராதனை என இன்நிகழ்ச்சி நடக்கிறது.காலை 8.30 மணிக்கு மஹா சுதர்ஸன ஹோமம் தொடங்குகிறது. மதியம் 11.30 மணிக்கு பூர்ணாஹுதி, சாற்றுமறை, மஹாதீபாராதனை முடிந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.  மாலை 5.00 மணிக்குபிரபந்த வேதபாராயணம் சதுர்வேதிபாரயல்லாம் சாற்றுமறை, மஹாதீபாராதனை, நடக்கிறது.இதனையடுத்து மூன்றாம் நாளாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் சுப்ரபாதம் பாடி திருபாலாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருவாராதனம், பஞ்சாகிக்கும் நீராட்டல், பூக்குட்டல் பிரபந்தவேத பாராயணம், கும்ப ஆராதனை என இவ்விழா தொடர்கிறது . இதை தொடர்ந்து மஹா சுதர்ஸன ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. அடுத்து மஹா தீபாராதனையுடன் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.  உற்சவர் சக்கரத்தாழ்வார்க்கு திருமஞ்சனம் மஹாதீபாராதனை  காட்டப்பட்டு மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜையுடன் இவ்விழா நிறைவுபெறுகிறது.

Similar News