தக்காளி வாரத்துக்கு குறைவு விலை உயர்வு

வரத்து குறைவு எதிரொலி ஈரோடு வ. உ . சி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது கிலோ ரூ.40-க்கு விற்பனை;

Update: 2025-07-03 06:45 GMT
ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டிற்கு தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தாளவாடி ஆந்திராவிலிருந்து வ. உ .சி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரத்து அதிகரித்து காணப்பட்டதால் தக்காளி ஒரு கிலோ சில்லறை விற்பனையில் ரூ.10 - 15 வரை விற்பனையானது. தற்போது ஆந்திராவில் இருந்து வரும் பெரும்பாலான தக்காளியில் சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதால் கடந்த சில நாட்களாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஆந்திராவில் இருந்து குறைவாகவே தக்காளிகள் வருகிறது. இதேபோல் தாளவாடியில் இருந்து ஓரளவு தக்காளிகள் வருகிறது. வரத்து குறைவு எதிரொலியாக கடந்த 4 நாட்களாக தக்காளி விலை சற்று உயர்ந்து வருகிறது. இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு வெறும் 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் தக்காளி விலை கடந்த வாரத்தை காட்டிலும் இன்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. 14 கிலோ கொண்ட சிறிய பெட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.150 ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 850 ஆக உயர்ந்தது. இதே போல் 10 நாட்கள் முன்பு 26 கிலோ கொண்ட பெரிய தக்காளி பெட்டி ரூ.350-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1200-க்கு விற்பனையானது. சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.40-க்கு விற்பனையானது. தொடர்ந்து வரதுக்கு குறைவாக வருவதால் இன்னும் சில நாட்களுக்கு தக்காளி விலை உயர்ந்து காணப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News