மடப்புரத்தில் இளைஞர் மரணம் - நடிகர் விஜய் நேரில் ஆறுதல்
மடப்புரம் இளைஞர் உயிரிழப்பு குறித்து நடிகர் விஜய் நேரில் ஆறுதல்;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார், காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல சமூக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் நீதிகேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் தம்பியிடம் நேரில் பேசிக் கொண்டு, நடந்த சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.