ராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பாத்திமா நகரில் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.25 லட்சம் மதிப்பில் திறப்பு;
ராமநாதபுரம் மாவட்டம் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ராமநாதபுரம் பாத்திமா நகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நகர்ப்புற சுகாதார மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சிறந்து வைத்தார் இதையொட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். இதில் தேவிபட்டினம் வட்டார மருத்துவர் ஜன்னத் யாஸ்மின் நகர்மன்றத்தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அர்ஜூன் குமார், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் நகர் நல அலுவலர் டாக்டர் ரெத்தினக்குமார்,கவுன்சிலர் கயல்விழி, ஒப்பந்ததாரர் பொறியாளர் அருணகிரி உள்பட பலர் பங்கேற்றனர்.