சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவர் விடுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதில் சிவகங்கை வட்டாட்சியர் சிவராமன் மற்றும் பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.