தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கத் திட்டம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் இந்தத் திட்டம் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.அதன்படி திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்ட துவக்க விழா நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு வேளாண்மை துறை மூலமாக ஊட்டச்சத்து பயிர் வகை தொகுப்பு காய்கறி தொகுப்பு பல செடிகள் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார் நிகழ்ச்சியில்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி, திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய திமுகசெயலாளர் அட்மா தலைவர்வட்டூர் தங்கவேல்,தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன்,வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.பயறு வகை தொகுப்பாக மரத்துவரை அஞ்சு கிராம் காராமணி 10 கிராம் அவரை 10 கிராம் ஆகிய பயிறு வகைகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது தோட்டக்கலைத் துறை மூலமாக தக்காளி இரண்டு கிராம் கத்தரி இரண்டரை கிராம் மிளகாய் 3 கிராம் கீரை 5 கிராம் வெண்டை 3 கிராம் கொத்தவரை 3 கிராம் எனஆறு வகையான காய்கறிகள்தொகுப்பு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது இதே போல் கொய்யா பப்பாளி எலுமிச்சை முதலிய பல செடிகள் தொகுப்பும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது மேலும் இத்திட்டத்தில் பயன்பெற உழவன் செயலி மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்அல்லது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.