திருக்கோவிலுார், கீரனுார் புறவழிச் சாலையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ. 3 கோடி மதிப்பில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் வேளாண் விரிவாக்க மையத்தினை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் குத்து விளக்கேற்றி அலுவலக செயல்பாட்டினை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.