உரிமையாளர் வீட்டின் திருடிய பெண் கைது
ஈரோட்டில் துணிகரம்உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை - பணத்தை திருடிய பெண் கைது போலீசார் விசாரணை;
ஈரோடு சடையம் பாளையம் சாலை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரேவதி. ஜெயக்குமார் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். ரேவதி கார்மெண்ட்ஸ் ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மேல் வீட்டில் ஜெயக்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். வாடகை வீட்டில் மணிமேகலை (28). என்பவர் கணவர் குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஜெயக்குமார், அவரது மனைவி, அவரது இரண்டு மகள்கள் என 4 பேரிடமும் தலா ஒவ்வொரு வீட்டு சாவி இருந்தது.மூத்த மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமாரிடம் இருந்த வீட்டு சாவி கடந்த சில நாட்கள் முன்பு தொலைந்து விட்டது. மகளிடம் சாவியை வாங்கி அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி ஜெயக்குமாரும் ரேவதியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலை ரேவதியும் வீட்டுக்கு வந்து கதவு திறந்து உள்ளே சென்றார். வீட்டு அறையில் இருந்த பீரோலை திறந்து பார்த்தபோது 15 பவுன் நகையும், ரூ.7,500 ரொக்க பணமும் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டு பூட்டு உடைக்கப்படாமல் எப்படி பணம் மாயமானது என்பது குறித்து ரேவதி குழம்பினார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அடங்க வீட்டில் வசிக்கும் மணிமேகலிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்தான் நகை பணத்தை திருடியது தெரியவந்தது. அதாவது ஜெயக்குமார் தொலைத்த வீட்டு சாவி மணிமேகலிடம் கிடைத்துள்ளது. அதை அவர் பத்திரமாக வைத்துக் கொண்டு வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் பீராவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமேகலையை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.