ஆற்காட்டில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு;
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேவையான சிகிச்சை வசதி இல்லாததால் நோயாளிகளை வேலூர் அல்லது வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இவ்வாறு மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாததை கண்டித்து ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.