கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை!
கோவில்பட்டியில் மகனின் விவாகரத்தால் மன விரக்தியில் கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.;
கோவில்பட்டியில் மகனின் விவாகரத்தால் மன விரக்தியில் கிணற்றில் குதித்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவர் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சென்று பொதுமக்களுடன் சேர்ந்து சடலத்தை மீட்டனர். அவர், கோவில்பட்டி சாலைபுதூர் இ.பி. காலனி 1ஆவது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் (63) என்பதும், தனது மகனின் விவாகரத்து காரணமாக விரக்தியடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.