இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்

திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, "ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன். அவர் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-07-07 17:46 GMT
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம். நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார். அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன். அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தினைத் திறந்து வைத்து, இரட்டைமலையாரைக் கொண்டாடிய நமது திராவிட மாடல் அரசு என்றும் அவர் ஏற்றிய உரிமைச் சுடரை அணையாமல் பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News