விவசாயத்தில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் ...........

கேரட் மற்றும் பூண்டு விலை தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால் கேரட் மற்றும் பூண்டு பயிரிடுவதில் மும்மரம் .....;

Update: 2025-07-08 15:55 GMT
கேரட் மற்றும் பூண்டு விலை தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால் கேரட் மற்றும் பூண்டு பயிரிடுவதில் மும்மரம் ........................... நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மழை காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், பூண்டு, பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி மற்றும் வெள்ளை பூண்டு ஆகியவை பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் கேரட் மற்றும் பூண்டுஅதிக விலை கிடைப்பதால், பெரும்பாலான விவசாயிகள் கேரட், பூண்டு பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் மலையின் காரணமாக விவசாயிகள் அதிகம் விவசாயம் மேற்கொள்வதல் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கேரட் மற்றும் பூண்டுற்கு மருந்து தெளித்தும் கலைஎடுத்தும் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கேரட்டின் விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருவதினால் அதிகப்படியான விவசாயிகள் கேரட் பயிரிடுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர் இதில், குறிப்பாக ஊட்டி அருகே உள்ள முத்தரைப்பாலாடா, கேத்தி பாலாடா, காட்டேரி போன்ற பகுதிகளில் தற்போது விவசாயிகள் கேரட் மற்றும் பூண்டு பயிரிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News