நகராட்சி அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலைக்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்..
நகராட்சி அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலைக்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலைக்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடியில் பெரிய கலவரம் போல் உருவான கடையை அகற்றாமல் அப்பாவி மக்களுடைய கடைகளை அகற்றுவதாக என கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இன்று வாணியம்பாடி நகராட்சித்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வரும் நிலையில், வாணியம்பாடி நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஒருதலைபட்சமாக குறிப்பிட்ட சில கடைகளை மட்டும் அகற்றுவதாகவும், நகராட்சிக்கு சொந்தமாக சாலையோரம் உள்ள கட்டிடங்களை அகற்றிவிட்டு மற்ற கடைகளை அகற்றுங்கள் எனக்கூறி வியாபாரிகளுக்கு ஆதரவாக வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சாலைக்கு வந்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார், அப்பொழுது பேசிய சட்டமன்ற உறுப்பினர், நாங்கள் சாலையில் உட்கார்ந்தால் தான் வேலை நடக்கும் நெடுஞ்சாலையில் உள்ள வாணியம்பாடி நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கடையை முதலில் அதிகாரிகள் எடுங்கள் பிறகு நாங்களே மற்றகடைகளை எடுத்துவிடுகிறோம், வாணியம்பாடியின் முக்கிய கழிவுநீரை கால்வாயை நகராட்சி அதிகாரிகள் மணல் கொட்டி மூடியுள்ளனர், மேலும் நகராட்சி கட்டிடத்தில் உள்ள கடையை அகற்றினால் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என தெரிவித்தை தொடர்ந்து நகராட்சி சொந்தமான கட்டிடத்தில் இருந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..