குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்

குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர்;

Update: 2025-07-10 12:16 GMT
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு விழிப்புணர் குறித்து கிராமிய மருத்துவ அலுவலர் தீபா தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி டெங்கு குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தினர் குனிச்சி அரசு சமுதாய சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த சுகாதார நிலையத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட குக்கிராம பகுதிகளில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் மழைக்காலம் நெருங்கி வருவதால் டெங்கு காய்ச்சலை குறித்து மாணவர்கள் மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மற்றும் கிராம செவிலியர்களுக்கு டெங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் அப்போது வட்டார மருத்துவ அலுவலர் தீபா பேசுகையில் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் யாவரும் டெங்கு பாதிப்புகுள்ளாகவில்லை என்றும். டெங்கு காய்ச்சல் வாராமல் எப்படி பாதுகாப்பது. தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தூய்மையான தண்ணிரில் லாவா கொசு முட்டையிட்டு பரவுகின்றது தேங்காய் சிரட்டை. தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பழைய உபயோகமற்ற பொருட்களில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிர்ப்பதை தவிர்க்க வேண்டும் காய்ச்சல் ஏற்பட்டால் கை மருத்துவம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அங்கீகாரம் மற்ற மறுத்தவரிடம் சிகிச்சை அளிக்க வேண்டாம் உடனே அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் என்று நோயாளிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் தீபா மற்றும் மருத்துவ அலுவலர் அரவிந்தன். அனுசுயா. வட்டார சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் பள்ளி மாணவர்கள். கிராம செவிலியர்கள். மற்றும் பொதுமக்கள் நோயாளிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News