ஜோலார்பேட்டை அருகே கண்டைனர் லாரி அடுத்தடுத்து ஐந்து கடைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்து

ஜோலார்பேட்டை அருகே கண்டைனர் லாரி அடுத்தடுத்து ஐந்து கடைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்து;

Update: 2025-07-10 12:22 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கோடியூர் பகுதியில் தூக்க கலக்கத்தில் கண்டைனர் லாரியை ஒட்டிய ஓட்டுநர்! அடுத்தடுத்து ஐந்து கடைகள் மீது மோதி கவிழ்ந்த கண்டைனர் லாரி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வையகலாத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் செந்தில் பாண்டின் (42) லாரி ஓட்டுநர் இவர் கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சார்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர்கள் சொந்தமான கண்டைனர் லாரியில் பெங்களூரிலிருந்து ஐஸ்கிரீம்களை ஏற்றிக்கொண்டு தர்மபுரியில் பாதி இறக்கிவிட்டு மீதியை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நோக்கி ஐஸ்கிரீமை இறங்க சென்று கொண்டிருந்தார். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தூக்க கலக்கத்தில் அதே பகுதி சேர்ந்த சண்முகம் மற்றும் முருகன் ஆகியோருக்கு சொந்தமான ஐந்து கடைகள் மீது கண்டைனர் லாரி அதிவேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து கடைகளும் சேதமடைந்தன மேலும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் மேலும் ஓட்டுநரின் காலில் மட்டும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனை அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் கிரைன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர் இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் லாரியை ஓட்டியதில் ஐந்து கடைகள் மீது லாரி மோதி கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Similar News