கூடலூர் அருகே படந்தொரை சி எஸ் ஐ உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்;
கூடலூர் அருகே படந்தொரை சி எஸ் ஐ உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகம், இந்திய செஞ்சிலுவை சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கிருபா பரமரணி முன்னிலை வகித்தார். சி எஸ் ஐ பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி தாளாளர் ஜான் மனோகர் முகாமினை துவக்கி வைத்தார். இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் ஜெய்னப் பாத்திலா தலைமையில் மருந்தாளுனர் நவீன், செவிலியர் சுமதி, நிர்வாக உதவியாளர்கள் லாய்ஷான் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு எடையளவு மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. தேவையுள்ளவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது. முகாமில் பள்ளி மற்றும் விடுதி மாணவ - மாணவிகள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.