ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்;
ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக கருத்தரங்கு நடைபெற்றது. ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது ஊட்டியில் இயங்கி வரும்ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி (JSS College of Pharmacy) சார்பில், 2025-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு பி.பார்ம் மற்றும் பார்ம்.டி,எம்.பார்ம் மாணவர்களுக்காக ஒரு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி (Freshers’ Induction Program) புதன்கிழமை இன்று கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ)முனைவர் கௌதமராஜன் பேசுகையில், “முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியின் நடைமுறையினை புரிந்து கொண்டு சிறப்பாக படித்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்” என்றார். நிகழ்வில் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வரவேற்கும் வகையில் சிறப்பு உரை வழங்கப்பட்டது. புதிய மாணவர்களுக்கு மருந்தியல் கல்வியின் முக்கியத்துவம், எதிர்கால தொழில்நுட்ப வாய்ப்புகள், மற்றும் நெறிமுறை அடிப்படைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதன்போது, மாணவர்களுக்கு கல்லூரியின் வளாகம், ஆய்வுக் கூடங்கள், நூலக வசதிகள், ஹோஸ்டல் மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகள் பற்றி விரிவாக அறிமுகம் செய்து கொள்ள உரையாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழாவில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய மாணவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தனர். புதிய மாணவர்கள் பலர் இந்த வரவேற்பு நிகழ்வை நினைவாகச் சொல்லக்கூடிய அனுபவமாகவே எடுத்துக்கொண்டனர் தேயிலை வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவரும் வழக்கறிஞரும் ஹிட்டக்கல் தேயிலை தொழிற்சாலை தலைவருமான தொழிலதிபர் . எம்.போஜராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியபோது கல்வி ஒரு அழகு பயணம் – அதனை நேசியுங்கள் மருந்தியல் என்பது மனித நலனுக்காக அர்ப்பணிக்கப்படும் ஒரு பணியோடு கூடிய பாடத்திட்டம். ஒவ்வொரு பாடத்தையும் புரிந்துணர்ந்து படிப்பது மிக முக்கியம். பேப்சி, அனாடமி, பியோக் எமிஸ்ட்ரி, பார்மாகாலஜி போன்ற அடிப்படை பாடங்கள் உங்கள் கேரியருக்கு அடித்தளம் தினசரி கற்றலை ஒரு பழக்கமாக மாற்றுங்கள் தினமும் கல்லூரியில் கற்ற பாடங்களை வீடு சென்று மறு வாசிக்க வேண்டும். நோட்ஸ் எழுதி வைத்திருங்கள் – இது தேர்விற்கும், புரிதலுக்கும் உதவியாக இருக்கும் நூலகத்தை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள். சிறந்த மென்கள், ஜர்னல்களும் காத்திருக்கின்றன லேபரட்டரி அனுபவத்தை மிஸ் செய்ய வேண்டாம் மருந்தாக்கியலில் செயல்முறை அறிவு மிகவும் முக்கியம் பிராக்டிக்கல்கள் செய்யும் பொழுது பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும். கேள்விகள் இருக்கும்போது பயப்படாமல் ஆசிரியை/ஆசிரியர்களிடம் கேட்கவும். நல்ல நட்புகள், நல்ல பழக்கங்கள் நல்ல நண்பர்கள் கல்வி பயணத்தில் ஊக்கமாக இருப்பர் தவறான பாதையில் செல்லும் நண்பர்களிடமிருந்து தன்னம்பிக்கையுடன் விலகவும். Time management (நேரம் மேலாண்மை) மிகவும் முக்கியம் – பொழுதை வீணாக்காதீர்கள்உடல் – மன நலனும் முக்கியம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தூக்க நேரம், யோகா அல்லது நடைப்பயிற்சி போன்றவை உங்களது மன அமைதிக்கும் ஒருங்கிணைக்கும் எதிர்காலத்தை உருவாக்கத் திட்டமிடுங்கள் மருந்தியல் பல துறைகளில் வேலை வாய்ப்புகளும் உயர்கல்விக்கும் வாய்ப்பு உள்ளது (R&D, Clinical Pharmacy, Hospital Pharmacy, Pharma Marketing, Drug Regulatory Affairs, etc) தங்களுக்கான துறையை ஆராய்ந்து, சான்றிதழ் கோட்ஸ்கள், இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் அடிக்கடி கேளுங்கள் – ஐயங்களை தெளிவுபடுத்துங்கள் சொல்லாமல் தவறுவது தவறு. கேட்டு புரிந்துகொள்வது அறிவு.” • ப்ரொஃபெஸர்கள், மேம்பட்ட மாணவர்கள், ஸினியர்கள் உங்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளார்கள் நீங்கள் இன்று எவ்வளவு உழைக்கிறீர்களோ, நாளை அதன் பயனை அவசியம் அடைவீர்கள்.” உங்கள் கல்விப் பயணம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்! நீங்கள் ஒரு நல்ல மருந்தியலாளராக உருவாகும் நாளை எதிர்நோக்கி, உற்சாகமாக இந்த பயணத்தைத் தொடங்குங்கள் என பேசினார் Dr.MJN.சந்திரசேகர், Dr. S. பொன்னுசங்கர், Dr. B. பாபு, Dr. S. Jubie, Dr. சத்தியநாராயணா, டாக்டர் என். கிருஷ்ணவேணி, டாக்டர் பிரியதர்ஷினி, டாக்டர் ஆர். ராஜேஷ் குமார் ஆகியோர் பல்வேறு விளக்கயுரை ஆற்றினர் பேராசிரியர் முனைவர் ஆர்.வடிவேலன் நன்றி கூறினார் .இவ்வகை நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு கல்வி பயணத்தை உற்சாகமாக தொடங்க தேவையான உறுதி மற்றும் பாதை விளக்கத்தை தருவதாக மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்தனர்