உதகையில் காய்க்க துவங்கிய ஊட்டி ஆப்பிள்... நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலக மலை தோட்ட காய்கறிகள் விவசாயம் மற்றும் தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகளை பயிரிட விவசாயிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சில காரணங்களாக நீலகிரி மாவட்டத்தில் ஆப்பிள் மரங்கள் நீலகிரியில் இருந்து மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள், ஆரஞ்சு, சீதா உள்ளிட்ட மரங்களும் வளர்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மணி என்பவரின் வீட்டில் உள்ள தோட்டத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஆப்பிள் மரம் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆப்பிள் மரத்தில் ஆப்பிள்கள் கணிசமான காய்த்து உள்ளது. உதகையில் நிலவும் காலநிலைக்கு ஆப்பிள் காய்த்து உள்ளதால் சுற்றுலாப்பயணிகளை வேகுவாக கவர்ந்து உள்ளது. மேலும் இவரது தோட்டத்தில் சீத்தாப்பழம், அத்தி மரம் போன்றவை நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.