கல்லல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
கல்லல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூர் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டி ஜோடிகள் பங்கேற்றன. பெரியமாட்டிற்கு 8 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 கிலோமீட்டர் தூரமும் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மதகுபட்டி சாலையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் பரிசை வெல்வதற்கு சாரதிகள் கடும் போராட்டம் செய்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்க பரிசும், நினைவுக் கோப்பையும் வழங்கப்பட்டது. இப்பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பந்தய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு கழித்தனர்