குளங்களில் மீன் பிடிப்பதற்காக ஏலம்
குளங்களில் மீன் பிடிப்பதற்காக ஏலம் விடப்பட்டது;
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன் பிடிப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இதில் பாலகிருஷ்ணா புரத்தில் உள்ள பெரியசெட்டி குளம் 18000க்கும் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள செங்குளம் 15000க்கும் அணைப்பட்டியில் உள்ள ஆயப்பண்ணைகுளம் 17,000க்கும் பாலகிருஷ்ணா புரத்தில் உள்ள சல்லிகரையான் குளம் 48000க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.