குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமையில் நடைபெற்றது!

குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமையில் நடைபெற்றது!;

Update: 2025-07-11 06:27 GMT
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமையில் நடைபெற்றது! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் தீபா தலைமையில் மருத்துவர்கள். மருத்துவ ஊழியர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்று கொண்டனர் நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும். தாய்மார்களின் நல்வாழ்விற்கும். குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன். சிறுகுடும்ப நெறி,திருமணத்திற்கேற்ற வயது. முதல் குழந்தையை தாமதபடுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள், முதல் குழந்தைக்கும். இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல். பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல். சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல். மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன். குடும்பநலத் திட்டத்தை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும். “உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21 அதுவே பெண்ணுக்கு திருமணத்திற்கும், தாய்மையடைவதற்கும் உகந்த வயது" என்று உறுதி மொழி ஏற்று கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள். அனுஷ்டயா,மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலார் ராமச்சந்திரன். மருத்துவ மனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்

Similar News