ராசிபுரத்தில் இடி மின்னல் உடன் கனமழை மின்சாரம் நிறுத்தம்...

ராசிபுரத்தில் இடி மின்னல் உடன் கனமழை மின்சாரம் நிறுத்தம்...;

Update: 2025-07-13 14:00 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது போல் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படும் என அறிவித்தது. இந்நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.மணி அளவில் தீடீரென காற்றுடன் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்சாரம் நிறுத்தம் ஏற்பட்டது. இதே போல் ராசிபுரம் சுற்றியுள்ள பட்டணம்,வடுகம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டலா, மங்களபுரம், குருசாமி பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது..

Similar News