வேலூர் கோட்டை மண்டபத்தை சீரமைக்க கோரிக்கை!
வேலூர் கோட்டை மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பல கட்டிடங்களும், மதில் சுவர்களும் சிதிலமடைந்து காணப்படுகின்றன.சிற்ப வேலைபாடுகள் கொண்ட தூண்களுடன் அமைந்துள்ள இந்த மண்டபம் உரிய பராமரிப்பு இன்றி இடிந்து சிதிலமடைந்துள்ளது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.