ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா!
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.45.65 லட்சம் மதிப்பில் கம்மவான்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.;
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.45.65 லட்சம் மதிப்பில் கம்மவான்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 14) குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.