தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்புள்ள காமராஜரின் திருஉருவச்சிலைக்கு திருநெல்வேலி பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பாலவேசம் உள்ளிட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.