உங்கள் ஊரில் உங்களைத் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எம்எல்ஏ தேவராஜ் பங்கேற்பு

உங்கள் ஊரில் உங்களைத் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எம்எல்ஏ தேவராஜ் பங்கேற்பு;

Update: 2025-07-15 09:40 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உங்கள் ஊரில் உங்களைத் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எம்எல்ஏ தேவராஜ் பங்கேற்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 10000 சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். மேலும் இந்த சிறப்பு முகாம்கள் நகர்ப்புறங்களில் 13 அரசு துறை சார்பில் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 16 அரசுத்துறை சார்பில் 46 சேவைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இத்திட்டத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவேப்பம்பட்டு பகுதியில் அமைந்துள்ள சசிபிரியா திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி தலைமையில் உங்கள் ஊரில் உங்களைத் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். அதனை பெற்று கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யாசதீஷ்குமார் உமா கண்ணுறங்கும் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர். மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன். மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News