வாணியம்பாடி அருகே செயல்படாத தோல் தொழிற்சாலை மூடப்படாமல் உள்ள மழைநீர் தொட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு..
வாணியம்பாடி அருகே செயல்படாத தோல் தொழிற்சாலை மூடப்படாமல் உள்ள மழைநீர் தொட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செயல்படாத தோல் தொழிற்சாலை மூடப்படாமல் உள்ள மழைநீர் தொட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு.. வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவமங்கலம் பகுதியில் உள்ள பல ஆண்டுகளாக செயல்படாத தனியார் தோல் தொழிற்சாலையில் உள்ள மூடப்படாமல் இருந்த மழைநீர் தொட்டியில் இன்று அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிராமிய போலீசார் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்த நபரின் உடலை வாணியம்பாடி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்டு, இறந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்க்கொண்ட போது, இறந்த நபர், சம்பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த சவுண்ட் சர்வீஸ் அமைக்கும் பணிபுரியும் தோன் போஸ்கோ (வயது 54) என்பது தெரியவந்துள்ளது, உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தோன் போஸ்கோ, மது அருந்தும் போது, தொட்டில் தவறி விழுந்தாரா? அல்லது வேறேதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு மேற்க்கொண்டு வருகின்றனர்..