ஜோலார்பேட்டை அருகே கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர்கள் காமராஜர் உருவில் நின்று அசத்தல்..

ஜோலார்பேட்டை அருகே கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர்கள் காமராஜர் உருவில் நின்று அசத்தல்..;

Update: 2025-07-15 12:34 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர்கள் காமராஜர் உருவில் நின்று அசத்தல்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த டி. வீரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் வேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்- பள்ளி தாளாளர் ஏலகிரி செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து கர்மவீரர் காமராஜரின் உருவ வடிவில் நின்று அசத்தினர். அதனுடைய காட்சி கழுகு பார்வையில் மிகவு அசத்தலாக இருந்தது.. காமராசர் குறித்து பல்வேறு போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள், இருபால் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News