நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே துணிக்கடையில் இரும்பு சீட்டை அறுத்து ஓட்டை போட்டு திருட்டு
நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே துணிக்கடையில் இரும்பு சீட்டை அறுத்து ஓட்டை போட்டு திருட்டு;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே துணிக்கடையில் இரும்பு சீட்டை அறுத்து ஓட்டை போட்டு 7000 பணம் 2 சட்டை மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் திருடி சென்ற கொள்ளையர்கள்* கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது மகன் சதீஷ் இருவரும் இணைந்து திருப்பூர் காட்டன் பஜார் என்ற பெயரில் கடந்த ஐந்து வருடங்களாக ஆர்.சிஸ் மெயின் ரோட்டில் துணிக்கடை வைத்து துணி வியாபாரம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் வழக்கம்போல துணிக்கடையை மூடிவிட்டு இரவு வெங்கடேசன் கடையின் அருகில் உள்ள குடோனில் தூங்கி உள்ளார் அவரது மகன் சதீஷ் பருகூரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் தங்கர சீட்டை அறுத்து ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 7000 ரூபாய் பணத்தையும், இரண்டு சட்டையையும், மேலும் சிசிடிவி காட்சி பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள துணி கடையில் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாட்றம்பள்ளி போலீசார் துணிக்கடையில் துளையிட்டு பணம் மற்றும் சட்டை, சிசிடிவி ஹார்ட் டிஸ்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்