இராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளியில் இலக்கிய மன்றங்கள் துவக்கவிழா..
இராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளியில் இலக்கிய மன்றங்கள் துவக்கவிழா..;
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஸ்ரீ வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளியில் இன்று இலக்கிய மன்றங்களின் துவக்கவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி எம்.கே. கமலி வரவேற்புரையாற்றினார். பள்ளியின் சேர்மன் இன்ஜினியர் என். மாணிக்கம் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினரை பள்ளியின் முதல்வர் சி. புனிதா அறிமுகம் செய்துவைத்தார். இலக்கிய மன்ற சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் டாக்டர் எம்.ஏ. உதயக்குமார், இலக்கிய மன்றங்களின் பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில் மாணவர்கள் அனைவரும் போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்றும். எந்த ஒரு செயலையும் தன்னம்பிக்கையுடன் செயல்படுத்த வேண்டும், உங்கள் பள்ளி உங்களுக்கு இரண்டாவது வீடு உங்களுடைய வீடு உங்களுடைய இரண்டாவது பள்ளி. பள்ளிக்கூடத்தில் கருப்பு போர்டு இருப்பதை போன்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். கருப்பு போர்ட் இல்லாத வீடே இருக்கக் கூடாது. குழந்தைகள் வீட்டிற்குச் சென்ற அங்கே அந்த கருப்பு போர்டில் தங்களது கணக்கு பாடங்களை மற்ற பள்ளியில் சொல்லிக் கொடுத்தவை எழுதி பார்க்க வேண்டும். இதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பெற்றோர்கள் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டால் போதும் என்று நினைத்து விடுகிறார்கள் அப்படி இருக்கக் கூடாது அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பெற்றோரின் பணி ரயில் தண்டவாளம் போன்று ஒரு தண்டவாளம் பெற்றோர்கள் இன்னொரு தண்டவாளம் ஆசிரியர்கள் இவர்கள் இரண்டு பேரும் சரியாக இருந்தால்தான் அந்த மாணவனால் வாழ்க்கையில் முன்னேற்ற நிலைக்குச் செல்ல முடியும். ஆசிரியர்கள் மாணவருக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்று கூறினார். விழாவில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சி. நடராஜீ, சிபிஎஸ்இ பள்ளி சேர்மன் இன்ஜினியர் என்.மாணிக்கம், பள்ளியின் செயலர் வி.சுந்தரராஜன், பொருளாளர் வி. இராமதாஸ், துணைத்தலைவர் டாக்டர் எம். இராமகிருஷ்ணன், நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வியில் கல்லூரி சேர்மன். டாக்டர் கே. குமாரசுவாமி. ஆர்விஇடி செயலர் எஸ். சந்திரசேகரன், இணை செயலர் வி. பாலகிருஷ்ணன், இயக்குநர் ஆர். பெத்தண்ணன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் திருமதி. சி.புனிதா, மெட்ரிக் பள்ளி முதல்வர் டாக்டர் பி.கிருஷ்ணமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சஙகத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் பத்தாம் வகுப்பு மாணவன் பி.மோனிஷ் பிரசன்னா அவர்கள் நன்றியுரையாற்றினார்.